மெஞ்ஞானபுரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்தில் 10 பயணிகள் காயம்


மெஞ்ஞானபுரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்தில் 10 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 1 Nov 2021 7:09 PM IST (Updated: 1 Nov 2021 7:09 PM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்தில் 10 பயணிகள் காயம் அடைந்தனர்

மெஞ்ஞானபுரம்:
நெல்லையில் இருந்து உடன்குடி நோக்கி நேற்று அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.  அப்போது ஏழுவரைமுக்கி அருகே எதிரே வந்த பள்ளி வாகனத்திற்கு வழிவிடும் போது அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பஸ் கண்ணாடியை உடைத்து பஸ் பயணிகளை மீட்டனர். இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story