டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
20 சதவீத போனஸ் கேட்டு டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்
20 சதவீத போனஸ் கேட்டு டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட(டேன்டீ) தொழிலாளர்களுக்கு மாநில அரசு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் 20 சதவீத போனஸ் வழங்க தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போனஸ் உயர்த்தி வழங்கப்படுவது குறித்து எந்த தகவலும் வெளியாகாததால் ஏமாற்றமடைந்த அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தனர். பின்னர் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல் முயற்சி
இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
கொரோனா காலத்தில் அனைத்து தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மூடி இருந்த சமயத்தில் அரசு தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். குறைந்த சம்பளத்தில் நோய் தொற்று பரவல் காலத்திலும் அயராது பாடுபட்ட நிலையில் போனஸ் குறைவாக வழங்குவது வருத்தம் அளிக்கிறது. எனவே 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோன்று பந்தலூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெற்றது. மேலும் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
Related Tags :
Next Story