போடிமெட்டு அருகே தொடர்மழையால் மண்சரிவு பாறைகள் உருண்டன
போடிமெட்டு அருகே தொடர்மழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன.
போடி:
போடியிலிருந்து கேரளாவை இணைக்கும் எல்லை பகுதியாக போடிமெட்டு உள்ளது. இங்கிருந்து கேரளாவில் உள்ள பூப்பாறை 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 90 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளன.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நேற்று காலை போடிமெட்டுவில் இருந்து பூப்பாறை செல்லும் வழியில் உள்ள தோண்டிமலை என்னும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story