தென்காசி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் நேற்று தொடங்கதை தொடர்நது பள்ளிக்கூடத்திற்கு உற்சாகமாக மாணவ-மாணவிகள் வந்தனர்
தென்காசி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் நேற்று தொடங்கதை தொடர்நது பள்ளிக்கூடத்திற்கு உற்சாகமாக மாணவமாணவிகள் வந்தனர்
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் நேற்று தொடங்கின. இதனால் பள்ளிக்கூடத்திற்கு உற்சாகமாக மாணவ-மாணவிகள் வந்தனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அடைக்கப்பட்டிருந்தன. படிப்படியாக தொற்கு குறைந்ததால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் 1 முதல் 8-ம் வகுப்பு வகுப்புகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து சுழற்சி முறையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும், என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய வருவாய் மாவட்டங்களில் உள்ள 309 அரசு ஆரம்ப பள்ளிகள், 65 நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் 376 ஆரம்ப பள்ளிகள், 120 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 156 தனியார் ஆரம்ப பள்ளிகள், 21 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,047 பள்ளிகள் நேற்று காலை திறக்கப்பட்டன.
ஆசிரியர்கள் வரவேற்பு
19 மாதங்கள் கழித்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடன் வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் மலர் கொடுத்து வரவேற்று, இனிப்பு வழங்கினர்.
முன்னதாக குழந்தைகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டன. முக கவசம் இல்லாத குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் முககவசம் வழங்கினர். தென்காசி 7-வது வார்டு நகராட்சி தொடக்க பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கி வரவேற்றார்.
Related Tags :
Next Story