பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நாமக்கல்:
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பாலியல் பலாத்காரம்
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் சக்திவேல் (வயது 25). இவர் நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த முருகன் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் விடுவிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story