விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை


விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 1 Nov 2021 10:47 PM IST (Updated: 1 Nov 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் பட்டாசு கொண்டு செல்கின்றனரா? என்று விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

விழுப்புரம், 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்கள் அனைவரும் குடும்பத்தினர், உறவினர்களுடன் தீபாவளியை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்ற வண்ணம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரெயிலில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடும். இதனால் ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ரெயில் பயணத்தின்போது பட்டாசு கொண்டு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

போலீசார் சோதனை

இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு விழுப்புரம் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் யாரேனும் பட்டாசுகளை கொண்டு செல்கின்றனரா? என்று விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்நாதன், சின்னப்பன், சேகர், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ரெயில்வே போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ரவி, போலீசார் புருஷோத்தமன், மணிகண்டன் உள்ளிட்டோர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story