சுகாதார ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்


சுகாதார ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 1 Nov 2021 11:01 PM IST (Updated: 1 Nov 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரிதிவிராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்வாணன், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பல்வேறு தொற்று நோய்களில் இருந்து தமிழக மக்களை காத்திட உருவாக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் பொது சுகாதாரத்துறையில் தொடர்ந்து நீடித்திட வேண்டும், சுகாதார ஆய்வாளர்கள் நிலை 2 பிரிவினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் துணைத்தலைவர் செங்கேணி, இணை செயலாளர் சரவணன், தணிக்கையாளர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story