பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2021 11:15 PM IST (Updated: 1 Nov 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி:
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து நேற்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மேகநாதன், மாநில துணைத்தலைவர் வெங்கடேச செட்டியார், மண்டல பொருளாளர் மாதப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் வரதன், பிரபு, ஜெயராமன், சென்றாயப்பன், நாராயணன், பச்சியப்பன், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு பா.ம.க. நிர்வாகிகள் கலைந்து சென்றனர். ஊத்தங்கரையில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம் தலைமை தாங்கினார். சமூகநீதி பேரவை மாநில துணை தலைவர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் முருகன், வேலு, அருண், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள், தமிழ்செல்வி, ஜெயலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் வெள்ளியரசு, நகர செயலாளர் மணிவண்ணன், நகர தலைவர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story