தர்மபுரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் பார்கள் திறப்பு-மதுபிரியர்கள் மகிழ்ச்சி


தர்மபுரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் பார்கள் திறப்பு-மதுபிரியர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Nov 2021 11:15 PM IST (Updated: 1 Nov 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி:
பார்கள் அடைப்பு
முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அதனை சார்ந்த பார்களும் மூடப்பட்டன. தொற்று குறைந்த நிலையில் கடந்த 29-12-2020 அன்று மீண்டும் பார்கள் திறக்கப்பட்டது. மீண்டும்  தொற்று அதிகரித்த நிலையில் கடந்த 26-4-2021 அன்று மீண்டும் டாஸ்மாக் பார்கள் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தமிழக அரசு அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பார்களையும் திறக்க அனுமதி அளித்தது. 
தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி பகுதியில் 9 கடைகள், பேரூராட்சி பகுதியில் 14 கடைகள், கிராமப்புறங்களில் 45 கடைகள் என மொத்தம் 68 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இதனை சார்ந்த பார்களில் முதல் கட்டமாக நேற்று 8 டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட மேலாளர் ஆய்வு
இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மாவட்ட மேலாளர் கேசவன் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். பார்கள் திறக்கப்பட்ட நிலையில் அங்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பதை பார்வையிட்டார்.
மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அவர்களுக்கு கிருமிநாசினி வழங்க வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Next Story