வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து: பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செய்ததை தொடர்ந்து இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தி அரூரில் தாலுகா அலுவலகம் முன்பு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் திருவேங்கடம், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல் குமரேசன், நகர செயலாளர் பெருமாள், அல்லிமுத்து, கோவிந்தராசு, தண்டபாணி பலர் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம் ஒன்றிய பா.ம.க. சார்பில் அகரம் பிரிவு சாலையில் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் குமரன், பழனி, நகர செயலாளர் செல்வம், இளைஞரணி மோகன் கலந்து கொண்டனர்.
இதேபோன்று நல்லம்பள்ளியில் பா.ம.க சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் செந்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன், சோனியாகாந்தி வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் அன்புகார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கம்பைநல்லூர்
கம்பைநல்லூரில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. இல.வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க செயலாளர் அரசாங்கம், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னசாமி ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அம்பிகா, ராஜாலிங்கம், நாராயணன், புழுதிகரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம், அன்புமணி ராமதாசின் நேர்முக உதவியாளர் சொல்லின் செல்வர், மாநில பாட்டாளி மாணவர் சங்க துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் மாயக்கண்ணன், ஒன்றிய செயலாளர் பசவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பொம்மிடி
பொம்மிடி ெரயில் நிலையம் முன்பு பா.ம.க. சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அமைப்பு செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகி முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றிய செயலாளர் தம்பிதுரை, நகர செயலாளர் கார்த்திக், நகர தலைவர்பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் சின்ன குப்பன், பழனிசாமி, வன்னியர் சங்க நகர செயலாளர் தனசேகர், பொம்மிடி ஊடக பேரவை ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு, பென்னாகரம்
இதேபோன்று பாலக்கோட்டில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் சரவணகுமாரி குப்புசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் பெரியம்மாள் நாகு, முன்னாள் வன்னியர் சங்க மாநில பொறுப்பாளர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் குமார், துரை, நகர செயலாளர் ராஜசேகர், முன்னாள் நகர செயலாளர் ராஜா, இளைஞர் சங்க மாவட்ட துணை செயலாளர் வேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பென்னாகரத்தில் பா.ம.க. சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சமூகநீதி பேரவை செயலாளர் மகாலிங்கம், மாநில மகளிரணி நிர்வாகி தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர் அன்புராசா, நகர செயலாளர் ஜீவா, கவுன்சிலர் அருள், முன்னாள் கவுன்சிலர் மாது உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story