பதவி உயர்வு வழங்கக்கோரி உண்ணாவிரதம்
சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் உண்ணாவிரதம் நடந்தது.
மயிலாடுதுறை;
சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதம்
பொது சுகாதாரத் துறையில் பணியாற்றிவரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தணிக்கையாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கிழக்கு மண்டல செயலாளர் ராஜ்குமார் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
காலிப்பணியிடங்கள்
உண்ணாவிரதத்தில் கொரோனா பெருந்தொற்று, டெங்கு போன்ற பேரிடர்களிலிருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2 பிரிவினருக்கு உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும். தனிப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 பணியிடங்களை நிலை நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதத்தை மாலை 5 மணி அளவில் முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் முடித்து வைத்து பேசினார்.
முடிவில் மாவட்ட தணிக்கையாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story