மூதாட்டியிடம் நகையை பறித்துக்கொண்டு ஆசாமி தப்பி ஓட்டம்


மூதாட்டியிடம் நகையை பறித்துக்கொண்டு ஆசாமி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2021 11:51 PM IST (Updated: 1 Nov 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

நல்லா இருக்கிறதே காட்டுங்கள் பார்க்கலாம் என கூறி மூதாட்டியிடம் 1½ பவுன் நகையை பறித்து கொண்டு ஆசாமி ஒருவன் தப்பி ஓடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராமநாதபுரம், 

நல்லா இருக்கிறதே காட்டுங்கள் பார்க்கலாம் என கூறி மூதாட்டியிடம் 1½ பவுன் நகையை பறித்து கொண்டு ஆசாமி ஒருவன் தப்பி ஓடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

1½ பவுன் நகையை திருடிய ஆசாமி

ராமநாதபுரம் அருகே உள்ள பழங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (வயது70). இவர் தனது வீட்டின் முன்புறம் உள்ள புளியமரத்தில் காற்றுக்காக உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பஞ்சவர்ணத்திடம் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். இதனால் வீட்டினுள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்த போது, கழுத்தில் கிடந்த சங்கிலி நன்றாக இருக்கிறதே இதே மாதிரிதான் நான் செய்யலாம் என்று இருக்கிறேன். காட்டுங்கள் பார்க்கலாம் என்று கேட்டுள்ளார்.
 அப்பாவியாய் கேட்பதுபோல் இருப்பதை கண்டு பஞ்சவர்ணம் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை கழட்டி கொடுத்துள்ளார். அதனை வாங்கி கொண்ட நபர் தனது கழுத்தில் அணிந்து கொண்டு நன்றாக இருக்கிறதா? என்று கேட்டுக்கொண்டே கண்இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார்.

போலீசில் புகார்

 சில நிமிடங்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நிலைகுலைந்த பஞ்சவர்ணம் தனது நகையை எடுத்து கொண்டு மர்ம நபர் ஓடுவதை பார்த்து திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டார். வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது அதற்குள் மர்ம நபர் ஓடிவிட்டார். இதுகுறித்து பஞ்சவர்ணம் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.


Next Story