பள்ளி அருகே வேப்ப மரம் விழுந்தது


பள்ளி அருகே வேப்ப மரம் விழுந்தது
x
தினத்தந்தி 1 Nov 2021 11:59 PM IST (Updated: 1 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

பிரான்மலை அரசு ஆரம்பப் பள்ளி வளாகம் முன்பு பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று நேற்று காலை 8 மணி அளவில் திடீரென சாய்ந்து விழுந்தது.

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்பப் பள்ளி வளாகம் முன்பு பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று நேற்று காலை 8 மணி அளவில் திடீரென சாய்ந்து விழுந்தது. 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உடனடியாக களத்தில் இறங்கி மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரம் அப்புறப்படுத்தப்பட்டது.அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். 

Next Story