கே.வி.குப்பத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம்- வேலூர் இடையே லத்தேரி வழியாக செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று இரவு மேல்மாயிலுக்கு வந்தது. ஆலங்கநேரி கானாறு அருகே சென்றபோது யாரோ வழியில் கற்களை அடுக்கி போக்குவரத்தை தடை செய்து இருந்தனர். இதனால் பஸ் அங்கு பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடி மீது மர்ம ஆசாமிகள் சிலர் கற்களை வீசினர். இதனால் கண்ணாடி உடைந்து பயணிகள் இருக்கை பகுதிகளில் சிதறியது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு இறங்கி ஓடினர்.
இதன்பிறகு பஸ் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் பஸ்சை கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் அருகில் கொண்டு வந்து நிறுத்தி போலீசில் புகார் செய்துள்ளனர். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாராவது கல்வீசியிருப்பார்களோ என்ற கோணத்தில் கே.வி.குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story