திருவாரூர் மாவட்ட கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்ட கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.
திருவாரூர்;
தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்ட கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.
தீபாவளி பண்டிகை
திருவாரூரில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருவாரூர் மாவட்ட கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்து கொண்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். தீபாவளியையொட்டி திருவாரூர் மாவட்ட கடைவீதிகளில் துணி, மளிகை பொருட்கள் வாங்க அதிக கூட்டம் அலைமோதியதால் திருவாரூர் டவுன் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து கடைவீதி உள்ளே செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
பாதுகாப்பு பணி
ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை அனுமதிக்க மறுத்து, கொட்டும் மழையில் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிக்க போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story