அதிக கட்டணம் வசூல்; ஆம்னி பஸ் பறிமுதல்


அதிக கட்டணம் வசூல்; ஆம்னி பஸ் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Nov 2021 12:06 AM IST (Updated: 2 Nov 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் அதிக கட்டணம் வசூல் செய்த ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

தேவகோட்டை,

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் தேவகோட்டையில் ஆய்வு செய்தனர். அப்போது சோதனை செய்த போது தேவகோட்டையில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ்சில் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட அதிக கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆம்னி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற திடீர் வாகன சோதனை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் மூலம் வரும் 10-11-2021 வரை கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிக்கும் மற்றும் அரசுக்கு சாலை வரி செலுத்தாத ஆம்னி பஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.


Next Story