பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியல்


பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Nov 2021 12:07 AM IST (Updated: 2 Nov 2021 2:03 PM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து குடியாத்தம், ஒடுகத்தூரில் பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து குடியாத்தம், ஒடுகத்தூரில் பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்ததை தொடர்ந்து தமிழக அரசு உடனடியாக வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி நேற்று குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர், மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் என்.குமார், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் ஜி.சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் கோபி, சாம்ராஜ், ராமன், நகர செயலாளர் விஸ்வநாதன், நகர தலைவர் விஜயக்குமார், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சுரேஷ், மாவட்ட மாணவரணி அரவிந்த் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்  ஈடுபட்டனர். அவர்களை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்து புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஒடுகத்தூர்

அணைக்கட்டு மேற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் சரவணன் தலைமையில் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story