வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 76 ஆயிரத்து 449 வாக்காளர்கள் உள்ளனர்


வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 76 ஆயிரத்து 449 வாக்காளர்கள் உள்ளனர்
x
தினத்தந்தி 2 Nov 2021 12:16 AM IST (Updated: 2 Nov 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 12 லட்சத்து 76 ஆயிரத்து 449 வாக்காளர்கள் உள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 12 லட்சத்து 76 ஆயிரத்து 449 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். 
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 6,18,001 ஆண்கள், 6,58,300 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 148 பேர் என்று மொத்தம் 12,76,449 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகம். குடியாத்தம் (தனி) தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 644 பேர் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலின்படி 12 லட்சத்து 71 ஆயிரத்து 132 வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின்னர் தொடர் சுருக்கமுறை காலத்தில் 10,900 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இருமுறை பதிவு, சட்டமன்ற தொகுதி மாறுதல் காரணங்களுக்காக 5,583 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு முகாம்கள்

வரைவு வாக்காளர் பட்டியல் 650 வாக்குச்சாவடிகள் உள்பட 661 இடங்களில் வருகிற 30-ந் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இதனை பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பம் அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற தேசிய இணையதளத்தின் மூலமாகவோ, செல்போனில் voter Helpline App மூலமாகவோ வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற 13,14,27,28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தேர்தல்பிரிவு தாசில்தார் ஸ்ரீராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக...

காட்பாடி:
ஆண்கள்-1,20,313, பெண்கள்- 1,28,911, மூன்றாம் பாலினத்தின்- 34. மொத்தம்- 2,49,258
வேலூர்:
ஆண்கள்- 1,21,478, பெண்கள்- 1,31,024, மூன்றாம் பாலினத்தினர்- 26, மொத்தம்- 2,52,528
அணைக்கட்டு:
ஆண்கள்- 1,24,368, பெண்கள்- 1,32,182, மூன்றாம் பாலினத்தினர்-39. மொத்தம்- 2,56,589
கே.வி.குப்பம் (தனி): 
ஆண்கள்- 1,10,839, பெண்கள்- 1,15,584, மூன்றாம் பாலினத்தினர்-7. மொத்தம்-2,26,430
குடியாத்தம் (தனி):
ஆண்கள்- 1,41,003, பெண்கள்- 1,50,699, மூன்றாம் பாலினத்தினர்-42. மொத்தம்- 2,91,644

5 தொகுதிகளிலும் ஆண்கள்-6,18,001, பெண்கள்- 6,58,300, மூன்றாம் பாலினத்தினர்-148 என மொத்தம்-12,76,449 வாக்காளர்கள் உள்ளனர்.

Next Story