பள்ளி மாணவ-மாணவிகளை மாலை அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள்
பள்ளி மாணவ-மாணவிகளை மாலை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர். ரோஜா பூ கொடுத்து கலெக்டர் இனிப்பு வழங்கினார்.
சிவகங்கை,
பள்ளி மாணவ-மாணவிகளை மாலை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர். ரோஜா பூ கொடுத்து கலெக்டர் இனிப்பு வழங்கினார்.
ரோஜா பூ ெகாடுத்து வரவேற்பு
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க 1 முதல் 8-ம்வகுப்பு வரையுள்ள பள்ளிகள் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையி்ல் தமிழகம் முழுவதும் அரசின் உத்தரவின் படி பள்ளிகள் நேற்று திறக்கபட்டன.
சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். அத்துடன் ஒவ்வொருவருக்கும் இனிப்பு வழங்கி நன்றாக படிக்கும்படி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முனியாண்டி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தனராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
1,572 பள்ளிகள் திறப்பு
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளி கல்வித்துறையின் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள் தொடங்கும் வகையில், மாவட்டத்தில் 1,572 பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 1,074 ஆகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் 130, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 153, மெட்ரிக் உயர்நிலைப்பள்ளிகள் 34, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் 53, சி.பி.எஸ்.இ.பள்ளிகள் 17, ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் 2, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 109-ம் சேர்த்து மொத்தம் 1,572 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு
சிவகங்கை மன்னர் நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணைச் செயலாளர் இளங்கோவன், நகர் கழக செயலாளர் ராஜா மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் அர்ஜுனன், கோபி, தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி இல்ம் பப்ளிக் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை தமிழரசி எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், பேரூர் கழக செயலாளர் நஜிமுதீன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நாசர், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, பள்ளியின் தலைவர் செய்யது கான், தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் நேற்று 1-ம் முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை பள்ளி செயலர் சேகர் தலைமையில் தலைமையாசிரியர் முத்துக்குமார், உதவி தலைமையாசிரியர் தியாகராஜன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நாகராணி மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகர்மன்ற ஆரம்ப பள்ளியில் மாணவர்களை மாலை அணிவித்து ஆசிரியைகள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார், ஆசிரியர் பயிற்றுனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை சாவித்திரி தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன், வட்டார கல்வி அலுவலர்கள் லெட்சுமி தேவி, ஆண்டோ ரெக்ஸ், இந்திராணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் கஸ்தூரி, ஊராட்சி மன்றத் தலைவி ஜோஸ்பின் மேரி, பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் குணா ஹாசன், தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story