ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு படம் வரைந்து பாடம் நடத்திய கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களை இனிப்பு, மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களை இனிப்பு, மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் வாசலில் நின்று இனிப்பு வழங்கியும், ரோஜா பூ கொடுத்தும் வரவேற்றனர்.
பாடம் நடத்தினார்
திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலம் அரசுப்பள்ளியில் கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். பிறகு, வகுப்பறைக்கு சென்ற அவர் விலங்கு, பறவைகளின் படங்களை கரும்பலகையில் வரைந்து அதன் பாகங்கள் குறித்து குறித்து பாடம் நடத்தினார். அப்போது, திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பள்ளிகளில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Related Tags :
Next Story