வடமாநில துணி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


வடமாநில துணி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Nov 2021 12:30 AM IST (Updated: 2 Nov 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில துணி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாமீன் (வயது 54). இவரது மகன் அமானுல்லா (19). இருவரும் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஹயாத் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் துணி வியாபாரம் செய்து வந்தனர்.
முகமது ஜாமீன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று திடீரென மின்விசிறியில் துப்பட்டா துணியால் தூக்குப்போட்டுக்கொண்டார். 

அவரை மகன் அமானுல்லா மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே முகமதுஜாமீன் இறந்து விட்டார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அவரது மகன் அமானுல்லா புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story