பா.ம.க.வினர் மறியல் போராட்டம்


பா.ம.க.வினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2021 12:46 AM IST (Updated: 2 Nov 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க.வினர் மறியல் போராட்டம்

திருப்பத்தூர்

தமிழக அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்தது. இதனை கண்டித்தும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் என கோரி திருப்பத்தூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிருஷ்ணகிரி ரோடிடில் மறில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா தலைமை தாங்கினார். 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யாதே, உச்சநீதிமன்றம் உடனடியாக இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும், தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். மாநில துணைத் தலைவர் ஜி.பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் ஆர்.கிருபாகரன், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் வி.ஜி.பி.கணபதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேமலதாசிவா, கவிதா திருப்பதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர செயலாளர் கராத்தே சிவா நன்றி கூறினார்.

Next Story