கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்


கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2021 1:07 AM IST (Updated: 2 Nov 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர்:
திரிபுராவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  தென்காசி மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செய்யது அலி, மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் செங்கை முகம்மது பைசல் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்துல் பாஷித், துணை தலைவர் செய்யது மசூது, துணை செயலாளர்கள் அகமத், காஜா முகைதீன், பீர் முகம்மது, செய்யது அன்வர் சாதிக், மாவட்ட தொண்டரணி செயலாளர் முகம்மது புகாரி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் ஜலாலுதீன் நன்றி கூறினார். 

Next Story