3 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு


3 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 1:25 AM IST (Updated: 2 Nov 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி கூட்டத்தை சமாளிக்க எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டது. கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டன.

திருச்சி, நவ.2-
தீபாவளி கூட்டத்தை சமாளிக்க எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டது. கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டன.
முன்பதிவில்லா பெட்டிகள்
தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் 23 சிறப்பு ரெயில்களில் நேற்று முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் 2-ம் வகுப்பு பெட்டிகளிலும் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இந்த 23 ரெயில்களில் 3 ரெயில்கள் திருச்சி ரெயில்வே கோட்டப் பகுதிக்கு வந்து செல்கின்றன.
திருச்சி-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரசில் 4 முன்பதிவில்லாத பெட்டிகளும், ராமேசுவரத்தில் இருந்து திருச்சி வரும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 பெட்டிகளும், கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சி வரும் பாலக்காடு டவுன் சிறப்பு ரெயிலில் 6 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பெட்டிகளில் நேற்று முதல் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணிக்க தொடங்கினர். ஓராண்டுக்கு பின்னர் முன் பதிவில்லா பெட்டியில் பயணிப்பதால் குறைந்த கட்டணத்தில் செல்லும் மகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக பயணிகள் தரப்பில் தெரிவித்தனர்.
கூடுதல் கவுண்ட்டர்கள்
ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அதிகம் பேர் தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில் நிலையங்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை வழங்க கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரெயிலில் பயணிப்பவர்கள் முககவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலில் உள்ளது என்றும், ரெயில்வே பிளாட்பாரத்தில் தேவையற்றவர்கள் வருவதை தவிர்க்க பிளாட்பாரம் டிக்கெட் 50 ரூபாய் கொடுத்து எடுக்க வேண்டும் எனவும் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story