பிசான பருவ சாகுபடிக்காக பாபநாச அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
நெல்லை:
இந்திய தேர்தல் ஆணையம் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார். அதனை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். அப்போது கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியலின்படி நெல்லை மாவட்டத்தில் 6,67,074 ஆண் வாக்காளர்கள், 6,96,271 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 113 பேர் என மொத்தம் 13 லட்சத்து 63 ஆயிரத்து 458 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை 7,302 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தொகுதி வாரியான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புப்படி புதிதாக 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,483 வாக்குச்சாவடிகள் உள்ளன.
வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க, நீக்கம் செய்ய, இடமாற்றம், திருத்தங்கள் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம். இதற்காக வரும் 13, 14, 27, 28 ஆகிய 4 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான www.nvsp.in மற்றும் Voters Help Line Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story