மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி தொழிலாளி பலி + "||" + Lightning strikes and kills worker

மின்னல் தாக்கி தொழிலாளி பலி

மின்னல் தாக்கி தொழிலாளி பலி
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் கீழ விளாங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன்(வயது 65). கூலி தொழிலாளி. அப்பகுதியில் நேற்று மதியம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அர்ஜூனன் வீட்டின் அருகே மழை நீர் சூழ்ந்துள்ளது. அப்போது வீட்டின் உள்ளே மழை நீர் வராமல் இருக்க கால்களால் தள்ளி தண்ணீரை வெளியேறியுள்ளார்.
அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அர்ஜூனன் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார் அர்ஜூனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் மோதி நகை தொழிலாளி சாவு
கருங்கலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நகை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிாிழந்தாா்.
3. குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
சொக்கம்பட்டி அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
4. தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்த தொழிலாளி சாவு
வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5. கட்டிட தொழிலாளி சாவு
மோட்டாரை இயக்க சென்ற கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.