பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவை


பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவை
x
தினத்தந்தி 2 Nov 2021 2:07 AM IST (Updated: 2 Nov 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவை நடைபெற்றது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தாதம்பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. நம்பெருமானுக்கு மூன்றாம் நாளான நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கருட சேவை சாதித்தார். இதில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. மாலையில் நம்பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு ராமர் திருக்கோலத்தில் அனுமந்த சேவை சாதித்தார். பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை வெண்ணைத்தாழி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

Next Story