பா.ம.க.வினர் சாலை மறியல்
பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றி வெளியிட்ட அரசாணையை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை கண்டித்தும், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கோரியும் பெரம்பலூரில் பா.ம.க.வினர் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவில் போலீசார் அவர்களை விடுவித்தனர்.
Related Tags :
Next Story