மாணவர்களுக்கு வரவேற்பு


மாணவர்களுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 2:31 AM IST (Updated: 2 Nov 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஜபாளையம்
ராஜபாளையம் பகுதியில் உள்ள 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புக்கான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ராஜபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 8- வது வார்டு நகராட்சி பள்ளி, திருவள்ளுவர் நகர் அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு,  மாணவிகளுக்கு பூங்கொத்து அளித்து  வரவேற்றார். மேலும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி, மேலவரகுணராமபுரம் கிராமத்தில் உள்ள பள்ளிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.  மாணவ-மாணவிகளை யூனியன் சேர்மன் சிங்கராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஊர் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி, கிளை கழக செயளாலர்கள், பொதுக்குழு உறுப்பினர் நல்லுச்சாமி, கருப்பையா, பாலகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story