ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்


ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 2 Nov 2021 2:48 AM IST (Updated: 2 Nov 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை ஆட்டு சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை ஆட்டு சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. 
ஆட்டு சந்தை 
அருப்புக்கோட்டையில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். இதில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வர். இந்த பகுதிகளில் உள்ள ஆட்டு சந்தையில் இதுவே பெரிய சந்தை என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. 
 இந்த சந்தைக்கு விளாத்திகுளம், புதூர், விருதுநகர், காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
விற்பனை மந்தம் 
வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய திங்கட்கிழமை நடைபெறும் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.
இந்நிலையில் இந்த ஆண்டும் சந்தையில் விற்பனை களை கட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனை மந்தமாகவே நடைபெற்றது. தொடர் மழை மற்றும் கொரோனா காரணமாக மிகக்குறைந்த அளவு வியாபாரிகளே ஆடுகளை வாங்க வந்திருந்தனர். விலையும் எதிர்பார்த்ததை விட ரூ.500 முதல் ரூ.1000 வரை குறைவாகவே ஆடுகள் விற்கப்பட்டன. இதனால் ஆட்டு உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விலை குறைவால் வழக்கமாக தீபாவளி அன்று உயரும் இறைச்சிவிலை இந்த ஆண்டு உயராது என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story