சுங்கத்துறை குடோனில் 1¾ கிலோ கடத்தல் தங்கம் மாயம்


சுங்கத்துறை குடோனில் 1¾ கிலோ கடத்தல் தங்கம் மாயம்
x
தினத்தந்தி 2 Nov 2021 3:04 AM IST (Updated: 2 Nov 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் உள்ள சுங்கத்துறை குடோனில் 1¾ கிலோ கடத்தல் தங்கம் மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சுங்கத்துறை குடோனில் 1¾ கிலோ கடத்தல் தங்கம் மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1¾ கிலோ தங்கம் மாயம்

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடத்தல் தங்கம் மற்றும் பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து தங்களுக்கு சொந்தமான குடோனில் பாதுகாத்து வருகிறார்கள். தற்போது அந்த குடோனில் இருந்து 1¾ கிலோ தங்கம் மாயமாகி உள்ளது. 

இதுகுறித்து சுங்கத்துறை சூப்பிரண்டு சீனிவாஸ் கோபால், கமர்சியல் தெரு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் சுங்கத்துறை அலுவலகத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் சுங்கத்துறை துணை இயக்குனர் கடந்த ஜூலை 15-ந்தேதி சோதனை மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த 1¾ கிலோ கடத்தல் தங்கம் மாயமாகி இருந்தது. இந்த தங்கம் கடந்த 2012 (722 கிராம்), 2016 (1 கிலோ) ஆகிய ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த தங்கத்தை, குடோனில் மேற்பார்வை பணியில் இருந்த 2 சூப்பிரண்டுகள், 2 இன்ஸ்பெக்டர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

4 பேர் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து கமர்சியல் தெரு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் 2 சூப்பிரண்டுகள், 2 இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) 2.6 கிேலா தங்கம் மாயமான வழக்கில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story