புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 89390 78888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
தடுப்பு சுவர்
மதுரையின் முக்கிய அடையாளமாக இருக்கும் வைகை கல்பாலத்தில் தடுப்பு சுவர்கள் இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்த வண்ணம் உள்ளது. எனவே வைகை கல்பாலத்தில் தடுப்புசுவர் அமைக்க வேண்டும்.
சங்கரபாண்டியன், செல்லூர்.
வேகத் தடைகள் அகற்றப்படுமா?
சிவகாசி சாலையில் இருந்து அழகாபுரி செல்லும் சாலையில் இடப்பக்கமும் வலப்புறமும் சுமார் 400 மீட்டர் தொலைவில் இரண்டு வேகத்தடைகள் உள்ளன. ஆனால் இங்கு வேகத்தடை உள்ளது என்ற அறிவிப்பு பதாகையோ சாலையில் வர்ணமோ ஒளிரும் தன்மை கொண்ட அடையாளங்களோ இல்லாததால் விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரத்ராஜா, விருதுநகர்.
சாக்கடை கழிவுகள்
மதுரை மாநகராட்சி வார்டு 35-வது பகுதி கலெக்டர் அலுவலகம் பின் பகுதியில் சாக்கடை கழிவுகள் அகற்றபடாமல் உள்ளது. மழைக்காலங்களில் நோய் தோற்று பரவும் வகையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இனியாவது நடவடிக்கை வருமா?
35-வது வார்டு மக்கள்.
வாய்க்கால் வசதி வேண்டும்
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலாத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாத்தூா் காலனி பகுதியில் ஒரு சில தெருக்களில் மட்டும் கழிவுநீா் வாய்க்கால் வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால், மழை காலங்களில் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தக்க நடவடிக்கை எடுத்து கழிவுநீா் வாய்கால் அமைத்து தருமாறு கேட்டு கொள்கிறோம்.
ஆலாத்தூா் காலனி, பொதுமக்கள்.
எரியாத மின் விளக்குகள்
ராமநாதபுரம் குமரய்யாகோவில் முதல் பட்டணம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை உள்ள ராமேசுவரம்--மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டர் மீடியன் மின்கம்பங்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இருள் சூழ்ந்துள்ளதால் அடிக்கடி விபத்தும் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய மின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோக்குமார், வண்ணாங்குண்டு.
நீர்தேக்க தொட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் செல்லப்பனேந்தல் ஊராட்சி வன்னிகோட்டை கிராமத்தில் இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு விட்டது. அதன்பின்னர் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வன்னிக்கோட்டை.
நாய் தொல்லை
ராமநாதபுரம் கேணிக்கரையில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், அந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், வாகன விபத்துகளும் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா முகமது, கேணிக்கரை.
சேதமான மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி பேரூராட்சி வார்டு எண் 12 வனமூர்த்திலிங்கம் பிள்ளை தெரு, தபால் அலுவலகம் தெரு உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் உள்ளது. பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை மாற்ற வேண்டும்.
மணிகண்டன், செட்டியார்பட்டி.
Related Tags :
Next Story