சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி விழுந்த என்ஜினீயர், மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பலி


சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி விழுந்த என்ஜினீயர், மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 2 Nov 2021 8:19 AM IST (Updated: 2 Nov 2021 8:19 AM IST)
t-max-icont-min-icon

கிண்டி சின்னமலை பகுதியில் வரும்போது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதால் நிலை தடுமாறி அருகில் சென்ற மாநகர பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய முகமது யூனுஸ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (வயது 28). என்ஜினீயரான இவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.

கிண்டி சின்னமலை பகுதியில் வரும்போது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதால் நிலை தடுமாறி அருகில் சென்ற மாநகர பஸ்சின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது மாநகர பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய முகமது யூனுஸ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story