மின்சார திருட்டுகள் கண்டுபிடிப்பு; குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தியதால் வழக்குப்பதிவு தவிர்ப்பு


மின்சார திருட்டுகள் கண்டுபிடிப்பு; குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தியதால் வழக்குப்பதிவு தவிர்ப்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 9:04 AM IST (Updated: 2 Nov 2021 9:04 AM IST)
t-max-icont-min-icon

மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட தாம்பரம் பகுதியில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை மையம், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் அமலாக்க பிரிவின் அதிகாரிகள், சென்னை தெற்கு-2 மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட தாம்பரம் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.9 லட்சத்து 78 ஆயிரத்து 40 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.73 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின்சார திருட்டு சம்பந்தமான தகவல்களை சென்னை அமலாக்கம் செயற்பொறியாளர் செல்போன் எண் 94458-57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story