மனநல சிகிச்சை மையத்தில் பெண் தற்கொலை
மனநல சிகிச்சை மையத்தில் மின்விசிறியில் கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
திருவள்ளூரை அடுத்த சேலை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி கவிதா (வயது 36). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் சாந்தி நகரில் உள்ள தனியார் குடிபோதை மற்றும் மனநல சிகிச்சை மையத்தில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு கவிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தான் தங்கி இருந்த அறையின் மின்விசிறியில் கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story