மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பட்டாசு வெடிக்கும்போது காயம் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி நடவடிக்கை குடித்தும் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். அவ்வாறு பட்டாசு வெடித்து கொண்டாடும்போது சில நேரங்களில் எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்படுவது வழக்கம். இந்த விபத்தை தடுக்கும் விதமாக பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தியணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று சென்னை எழும்பூர், அசோக்நகர், மாதவரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அதிகாரிகள் வடிவேல், ஜேம்ஸ் அருள் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், பட்டாசு வெடிக்கும்போது காயம் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி நடவடிக்கை குடித்தும் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கினர்.
Related Tags :
Next Story