தூத்துக்குடி மாவட்டத்தில் தலைத்தீபாவளி கொண்டாடும் 46 போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் தலைத்தீபாவளி கொண்டாடும் 46 போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கினார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் தீபாவளி கொண்டாட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, போலீசாருக்கு வாழ்த்துக்களை கூறினார். தொடர்ந்து போலீசில் தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. அதன்படி 46 பேர் இந்த ஆண்டு தலைதீபாவளி கொண்டாடுகின்றனர். அவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதனால் போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story