திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 5:10 PM IST (Updated: 2 Nov 2021 5:10 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் வருகிற 9-ந் தேதி சூரசம்ஹாரம் நடப்பதால் அன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கந்தசஷ்டி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு 9-ந்தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறைக்கு பதிலாக 27.11.2021 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
அனுமதி இல்லை
மேலும், சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆகையால் கோவிலில் நடைபெறும் அனைத்து வித நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story