நிரம்பி வழியும் தடுப்பணைகள்
தளியை அடுத்த பொன்னாலம்மன் சோலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தடுப்பணைகளில் நிரம்பி வழிந்தோடுகிறது.
தளி
தளியை அடுத்த பொன்னாலம்மன் சோலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தடுப்பணைகளில் நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சாகுபடி
உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். சாகுபடி பணிகளுக்கு திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறுகள், பருவமழை கை கொடுத்து வருகிறது. அதை ஆதாரமாக கொண்டு நீண்டகால பயிர்கள், காய்கறிகள், தானியங்கள், மானாவாரி சாகுபடி நடைபெற்று வருகிறது.
மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்து நீராதாரங்களில் தேங்குவதால் நிலத்தடி நீர்இருப்பும் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் தடையில்லாமல் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் வறட்சி காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகி விடுவதும் வாடிக்கையாக உள்ளது.
தடுப்பணை
இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி உடுமலை, தளி, அமராவதி பகுதியில் அவ்வப்போது சாரல் மற்றும் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி வருவதுடன் நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வெள்ளம் நீர் வழித்தடங்கள் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தேங்கி வழிந்த வண்ணம் உள்ளது. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. பொன்னாலம்மன் சோலை பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தடுப்பணைகளில் நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story