2 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல்


2 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 2 Nov 2021 5:23 PM IST (Updated: 2 Nov 2021 5:23 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மேலும் 2 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருப்பூர்
திருப்பூரில் மேலும் 2 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
டெங்கு பாதிப்பு 
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்பூர் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளுடன் டெங்கு கொசு ஒழிப்பு பணியும் நடந்து வருகிறது. தமிழகத்தில் டெங்கு ஹாட் ஸ்பாட்டாக திருப்பூர் மாநகரம் கடந்த காலங்களில் இருந்து வந்தது. 
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி உள்ளது. இதனால் மீண்டும் டெங்கு பாதிப்பும் ஏற்பட தொடங்கியுள்ளது. 
2 சிறுவர்களுக்கு டெங்கு 
அதன்படி திருப்பூர் வீரபாண்டி ராமபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் மற்றும் ஸ்ரீநகர் பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்த 11 வயது சிறுவன் ஆகிய 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2 பேரும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கிய நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 
வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுபோல் டயர்கள், தேங்காய் சிரட்டைகள், தண்ணீர் தொட்டிகளில் மழைநீர் தேங்க விடாமல் பார்த்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
------



Next Story