ரசீது இல்லாமல் விதைகளை வாங்க கூடாது
ரசீது இல்லாமல் விதைகளை வாங்கக் கூடாது என்று விவசாயிகளுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
குண்டடம்,
ரசீது இல்லாமல் விதைகளை வாங்கக் கூடாது என்று விவசாயிகளுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆய்வு
ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் ஜெயராமன் குண்டடம், ஊதியூர், கொடுவாய் பகுதிகளில் செயல்பட்டு வரும் நாற்றுப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் விதை விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது விதைகள் தரமானவையா என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாதவர்களிடம் விதைகளை வாங்கக் கூடாது.
விதைகளின் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும். அதைப் பார்த்து காலாவதியான விதையாக இருந்தால் வாங்கக் கூடாது. கட்டாயம் விதைகள் வாங்கும்போது ரசீதைக் கேட்டுப் பெற வேண்டும். விதை விற்பனையாளர் வழங்கும் ரசீதில் விதைகளின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
பருவம் தவறிய நாற்றுகள்
அதே போல காய்கறி நாற்றுக்களை லைசென்ஸ் பெற்ற நாற்றுப் பண்ணைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.பருவம் தவறிய நாற்றுக்களை வாங்கி நடவு செய்யக் கூடாது. பருவம் தவறிய, வயதான நாற்றுக்களை வாங்கி நடவு செய்தால் மகசூல் குறைவு ஏற்படும். அதனால் மேற்கண்ட விபரங்களை அறிந்து விதை, நாற்றுக்களை வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
. இந்த ஆய்வின் போது விதை ஆய்வு உதவி இயக்குனர் விஜயா உடனிருந்தார்.
Related Tags :
Next Story