தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதன்கிழமை பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதன்கிழமை பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன
x
தினத்தந்தி 2 Nov 2021 6:21 PM IST (Updated: 2 Nov 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதன்கிழமை பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
சிறப்பு முகாம்
தமிழக அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வண்ணமாகவும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தவும், இந்த முகாம்களை பொங்கல் பண்டிகைக்கு முன்பு நடத்தி பொதுமக்களின் குறைகளை முழுமையாக களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கடந்த வாரம் முதல் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
கிராமங்கள்
இதன் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா தெற்கு சிலுக்கன்பட்டி, முத்துசாமிபுரம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வல்லநாடு கஸ்பா, ஆழிகுடி, திருச்செந்தூர் தாலுகா லட்சுமிபுரம், வாகைவிளை, சாத்தான்குளம் தாலுகா பிடாநேரி, எழுவரை முக்கி, ஏரல் தாலுகா கொட்டாரக்குறிச்சி, மாரமங்கலம், ஓட்டப்பிடாரம் தாலுகா சந்திரகிரி, ஆதனூர், கொல்லம்பரும்பு, விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரம், நடுக்காட்டூர், புதூர், குளக்கட்டாங்குறிச்சி, எட்டயபுரம் தாலுகா என்.புதுப்பட்டி, அயன்கரிசல்குளம், வி.கோடாங்கிபட்டி, கோவில்பட்டி தாலுகா இடைச்செவல் பகுதி-2, வானரமுட்டி, கயத்தாறு தாலுகா சிதம்பரம்பட்டி, செட்டிக்குறிச்சி, திருமங்கலகுறிச்சி ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
எனவே மேற்படி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்து தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story