விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை


விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 2 Nov 2021 6:37 PM IST (Updated: 2 Nov 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

விடுவது தொடர்பாக விவசாயிகளுடன் ஆர்டிஓ பேச்சுவார்த்தை

காங்கேயம்
வெள்ளகோவில் பி.ஏ.பி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விடுவது தொடர்பாக விவசாயிகளுடன் ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தினார். 
பி.ஏ.பி.பாசனம்
பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பி.ஏ.பி. நிர்வாகம் முறைகேடாக பயன்படுத்துவதாகவும்,  சமச்சீர் பாசனம் என்று பெயரளவில் வைத்துக் கொண்டு, வெள்ளகோவில் கிளைக்குத் தேவையான தண்ணீரை பி.ஏ.பி நிர்வாகம் கொடுப்பதில்லை எனவும், இதனால் பல ஆண்டுகளாக வஞ்சித்து வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துவருகிறார்கள். விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என காங்கேயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள்  கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக  பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் காங்கேயம்வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதம், கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை
 இந்த பிரச்சினை தொடர்பாக காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.  தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமை தாங்கினார். இந்த  பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதற்கு காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர்.ஆனால் பேச்சுவார்த்தைக்கு 20 விவசாயிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மற்ற விவசாயிகள் அங்கிருந்த பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், அங்கிருந்த விவசாயிகளை தாசில்தார் அலுவலக வளாகத்தின் வெளியே நிற்க வைத்து கதவைப் பூட்டினர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
-

Next Story