அய்யன்கொல்லி அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
அய்யன்கொல்லி அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
பந்தலூர்
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே உள்ள சீபுண்டி, கருத்தாடு, முருக்கம்பாடி, தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்பட பல பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வசிப்பவர்கள் தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தங்களது தோட்டங்களில் பயிரிட்டு உள்ளனர். இந்த குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிபுண்டி பகுதிக்குள் 7 காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிததனர்.
Related Tags :
Next Story