35 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் அருகே 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனின் நேரடி மேற்பார்வையில் செயல்படுகிற தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷேக் தாவூத், மாரிமுத்து ஆகியோர் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் அருகே மாலப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
திண்டுக்கல்-தோட்டனூத்து சாலையில், வலசக்கேணி என்னுமிடத்தில் சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் பாலித்தீன் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை நெருங்கியபோது, அந்த வாலிபர் மூட்டையை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.
இதனையடுத்து அந்த மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அந்த சாக்குப்பையில் இருந்து 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில், தப்பி ஓடிய வாலிபர் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த குணசேகரன் (வயது 30) என்று தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குணசேகரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story