நெல்லையில் சாலை பள்ளத்தில் சிக்கி 2 லாரிகள் கவிழ்ந்தன


நெல்லையில் சாலை பள்ளத்தில் சிக்கி 2 லாரிகள் கவிழ்ந்தன
x
தினத்தந்தி 2 Nov 2021 8:53 PM IST (Updated: 2 Nov 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சாலை பள்ளத்தில் சிக்கி 2 லாரிகள் கவிழ்ந்தன

நெல்லை:
நெல்லையில் மழையால் ேசதம் அடைந்த சாலை பள்ளத்தில் சிக்கி 2 லாரிகள் கவிழ்ந்தன.
குண்டும், குழியுமான சாலை
நெல்லை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்க தோண்டிய இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் ஆங்காங்கே கனரக வாகனங்களின் சக்கரங்கள் மண்ணுக்குள் சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதேபோல் மோட்டார்சைக்கிளில் செல்பவர்களும் தவறி விழும் நிலை உள்ளது.
இந்த நிலையில் நேற்று நெல்லையில் அடுத்தடுத்து 2 லாரிகள் கவிழ்ந்தன.
லாரி கவிழ்ந்தது
தூத்துக்குடியில் இருந்து நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள ஒரு தனியார் காகித ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு நேற்று காலை ஒரு லாரி புறப்பட்டு வந்தது. லாரி நெல்லை டவுன் நயினார் குளம் பகுதியில் சென்றபோது, பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் எர்ணாகுளத்தில் இருந்து நெல்லையில் உள்ள ஒரு கடைக்கு பிளைவுட்ஸ் ஏற்றிக் கொண்டு நேற்று காலை ஒரு லாரி புறப்பட்டு வந்தது. லாரியை கன்னியாகுமரியை சேர்ந்த துரைராஜ் என்பவர் ஓட்டினார். லாரி நெல்லை ஸ்ரீபுரம் சிவசக்தி தியேட்டர் ரோட்டில் சென்றபோது அந்த பகுதியில் சேறும் சகதியுமான பள்ளத்தில் சிக்கி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 2 லாரிகளின் டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

Next Story