10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து: பா.ம.க.வினர் மறியல்; பஸ் கண்ணாடி உடைப்பு


10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து:  பா.ம.க.வினர் மறியல்; பஸ் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 10:09 PM IST (Updated: 2 Nov 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம்-திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ரிஷிவந்தியம், 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து  கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுரோடு மும்முனை சந்திப்பில் ரிஷிவந்தியம் ஒன்றிய பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அப்போது ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் அமல்ராஜ் தலைமையில் மாநில துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் திடீரென அந்த வழியாக வந்த வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை மர்மநபர் ஒருவர் கல்வீசி உடைத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதுபற்றி தகவல் அறிந்ததும் பகண்டை கூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை சமாதானம் செய்து, அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம்- திருக்கோவிலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கல்வீசி பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதில், அந்த பஸ்சின் டிரைவர் மணிகண்டன் மற்றும் பயணிகள் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story