அரசு அனுமதித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கலெக்டக் அமர் குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கலெக்டக் அமர் குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நேரக்கட்டுப்பாடு
தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன்படி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் செயல்பட்டு வரும், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாசற்ற தீபாவளி
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களிளிலும், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில், கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story