கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை
விழுப்புரத்தில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
விழுப்புரம்,
இறந்த உறவினர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர்.
இந்நாளில் கல்லறை தோட்டத்துக்கு சென்று தங்களது குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களின் ஆன்மாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கமாகும்.
பிரார்த்தனை
அதன்படி நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி விழுப்புரத்தில் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்று காலை முதலே ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டு வந்தனர். காலை வேளையில் மழை தூறிக்கொண்டே இருந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் கிறிஸ்தவர்கள் குடைபிடித்தபடி கல்லறை தோட்டத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து, அங்குள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கல்லறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்தனர். பின்னர் அந்த கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர்தூவி பிரார்த்தனை செய்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story