கே.வி.குப்பம் அருகே அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு
அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அருகே ஆலங்கநேரி கானாறு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலரால் அரசு டவுன் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று குடியாத்தம் -காட்பாடி இடையே செல்லும் டவுன் பஸ் பில்லாந்திப்பட்டு அருகே வந்தபோது மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இதுகுறித்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அரசு பஸ் கண்ணாடிகளை தொடர்ந்து 2-வது நாளாகச் சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்று இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story